New Books 2025 Released - Empowering Knowledge | Connecting Authors | Inspiring Readers

Journal

Home Journal

வாரணம் பன்னாட்டுச் சமய ஆய்விதழ்

Vaaranam International Journal of Religious Studies

Journal Description

Journal Title (In Regional): வாரணம் பன்னாட்டுச் சமய ஆய்விதழ்
Journal Title (In English): Vaaranam International Journal of Religious Studies
Publication language: Tamil (தமிழ்) & English (ஆங்கிலம்)
Publishing frequency: Quarterly (March, June, September, December)
Journal Coverage: International
Publication: Research Journal
Subject Category: Arts and Humanities
Subjects Coverage: Religious Studies
Publishing Model: Open Access
Publication Release process: Peer Reviewed
Mode: Print and Online

நோக்கம்

நமது பண்பாட்டில் சமயம் என்பது தொன்மை வாய்ந்த நம்பிக்கையாகும். சமயம் அல்லது சமய ஆய்வுகள் என்பது சமயத்தை விவரித்து, ஒப்பிட்டு, விளக்கி, புரிந்து கொள்ளும் ஒரு கல்வித் துறையாகும். இது சமயதத்தை அறிவியல் ரீதியாக அணுகுகிறது. பல பண்பாட்டு, வரலாற்று அடிப்படையிலான மற்றும் அனுபவ அடிப்படையிலான கோணங்களை முக்கியமாகக் கொண்டு ஆய்வு செய்கிறது. அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்டப் பல்கலைக்கழகங்களில் உள்ள சமயம் சார்ந்த கல்விப் பாடப்பிரிவுகளில் அடங்கும் சைவம், வைணவம், சமணம், பெளத்தம், கிறித்துவம், இஸ்லாமியம் மற்றும் பிற சமயங்கள் சார்ந்த ஆய்வுகளே முன் மொழிய வேண்டும். பல்கலைக்கழகங்களில் உள்ள சமயம் சார்ந்த பாடப்பிரிவுகளில் உள்ள ஆய்வுநெறிகளைப் பின்பற்றியே ஆய்வுக்கட்டுரைகள் அமைய வேண்டும். வாரணம் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வெளியிடும், சக மதிப்பாய்வு செய்யப்பட்ட, பன்னாட்டு ஆய்விதழாகும்.

Scope

Religion is an ancient belief in our culture. Religion or religious studies is an academic discipline that describes, compares, explains, and understands religion. It approaches religion scientifically. It studies it from multiple cultural, historical, and empirical perspectives. Religious studies courses in government-recognized universities should include courses on Saivism, Vaishnavism, Jainism, Buddhism, Christianity, Islam, and other religions. Research papers should follow the research guidelines in religious studies in universities.

ஆய்வு களங்கள்

பக்தி இலக்கியங்கள், சமயங்களில் மாற்றங்கள், புராணங்கள், கலைகள், பண்பாடுகள், பாரம்பரிய சமய சடங்குகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், கோயில் கட்டடக்கலைகள், கோயில் சிற்பங்கள், கோயில் கல்வெட்டுகள், சமய ஓலைச்சுவடிகள், தலப்புராணங்கள், தலமரங்கள், கோயிலில் நடைபெறும் பூசைகள், கோயில் ஆகமங்கள், கோயில் இசைப்பாடல்கள், கோயில் நடனங்கள், கோயில் வழிபாடுகள், கோயில் ஓவியங்கள், கோயில் திருவிழாக்கள், கோயில் பணியாளர்கள் (அர்ச்சகர், ஓதுவார், தேவரடியார்…),ஓலைச்சுவடிகள், வரலாறு, தொல்லியல், சோதிடம், கோட்பாடுகள், தத்துவம், யோகா, சுற்றுலா மற்றும் கிறித்துவ இலக்கியங்கள்,இஸ்லாமிய இலக்கியங்கள்,சமணம்,பெளத்தம் போன்ற சமயங்களிலுள்ள இலக்கியங்கள் போன்ற களங்களில் ஆய்வுகள் அமையலாம்.

முக்கிய அறிவிப்பு

சமயம் சார்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளும் பேராசிரியப் பெருமக்கள் ஆசிரியர் குழுவில் இணைய விண்ணப்பிக்கலாம். மின்னஞ்சல் முகவரி: niththilamofficial@gmail.com